Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்கள் கடந்து கொரோனா பரிசோதனை செய்தால் தவறான முடிவுகள் காட்ட வாய்ப்பு

நாட்கள் கடந்து கொரோனா பரிசோதனை செய்தால் தவறான முடிவுகள் காட்ட வாய்ப்பு

By: Nagaraj Sun, 07 June 2020 1:59:57 PM

நாட்கள் கடந்து கொரோனா பரிசோதனை செய்தால் தவறான முடிவுகள் காட்ட வாய்ப்பு

தவறான முடிவை காட்டும் பரிசோதனை... கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு, எத்தனை நாட்கள் கழித்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பதைப் பொறுத்து, 21 சதவீதம் அளவுக்கு, அதாவது 5-ல் ஒருவருக்கு தவறான முடிவை காட்ட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிய ஆர்டி-பிசிஆர் என்ற பரிசோதனை முறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், 5 பரிசோதனைகளுக்கு ஒன்று என்ற வீதத்தில் முடிவு தவறாகக் காட்டப்பட வாய்ப்பிருப்பதாக, அமெரிக்காவின் பால்டிமோரை சேர்ந்த, Johns Hopkins Medicine விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

study essay,experiment,corona,results,mistake ,ஆய்வு கட்டுரை, பரிசோதனை, கொரோனா, முடிவுகள், தவறு

கொரோனா தொற்று ஏற்பட்ட எத்தனை நாட்கள் கழித்து பரிசோதனை செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து இந்த துல்லியத்தன்மை வேறுபடுகிறது.

முதல் 5 நாட்களுக்குள் எடுக்கும்போது, பரிசோதனை முடிவு 67 சதவீதம் தவறாகப்போக வாய்ப்பிருப்பதாகவும், 8ஆவது நாளில் எடுக்கும்போது, பரிசோதனை முடிவு தவறாகப் போய்விடுவதற்கான வாய்ப்பு 21 சதவீதமாகக் குறைந்து விடுவதாகவும் ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.

Tags :
|