Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கலிபோர்னியாவில் கொரோனா பாதிப்பு 2.87 லட்சமாக அதிகரிப்பு

கலிபோர்னியாவில் கொரோனா பாதிப்பு 2.87 லட்சமாக அதிகரிப்பு

By: Nagaraj Wed, 08 July 2020 7:01:20 PM

கலிபோர்னியாவில் கொரோனா பாதிப்பு 2.87 லட்சமாக அதிகரிப்பு

கலிபோர்னியாவில் 2.87 லட்சமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது... கலிபோர்னியாவில் புதிதாக 10,201 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் உறுதிசெய்யப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 287,514 ஆக அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்பானது கடந்த வாரம் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கும், உட்புற உணவகங்களுக்கு தடைவிதிப்பதற்கும் மதுக்கடைகளை மூடுவதற்கும், சமூக தூரத்தை அதிகரிப்பதற்கும் வழிவகுத்தது.

corona,deaths,increase,california ,கொரோனா, இறப்புகள், அதிகரிப்பு, கலிபோர்னியா

இதற்கிடையில், டெக்சாஸ் மாநிலத்தில் நேற்று புதிதாக 10,028 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கலிபோர்னியாவில் சுமார் 6,500 பேர் உயிரிழந்ததோடு டெக்சாஸில், 3,000 க்கும் குறைவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை 131,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|