Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 45 ஆயிரத்து 380 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 45 ஆயிரத்து 380 ஆக உயர்வு

By: Monisha Tue, 26 May 2020 11:45:25 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 45 ஆயிரத்து 380 ஆக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

எனினும் நாடு முழுவதும் வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

india,coronavirus,central health department,maharashtra,tamil nadu ,இந்தியா,கொரோனா வைரஸ்,மத்திய சுகாதாரத்துறை,மகாராஷ்டிரா,தமிழ்நாடு

இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 145380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6535 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 146 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4167 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 60491 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலம் பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

Tags :
|