Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61 ஆயிரத்து 227 ஆக உயர்வு

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61 ஆயிரத்து 227 ஆக உயர்வு

By: Monisha Fri, 29 May 2020 11:35:51 AM

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61 ஆயிரத்து 227 ஆக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 59 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது.

china,coronavirus,pakistan,impact number,death toll ,சீனா,கொரோனா வைரஸ்,பாகிஸ்தான்,பாதிப்பு எண்ணிக்கை,பலி எண்ணிக்கை

கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 61 ஆயிரத்து 227 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 076-க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனாவுக்கு 35 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,260 ஆக அதிகரித்துள்ளது.

Tags :
|