Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,256 ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,256 ஆக உயர்வு

By: Monisha Sat, 04 July 2020 4:24:00 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,256 ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 2,181 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 58 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,385 பேர் உயிரிழந்துள்ளனர்.

coronavirus,influence,kills,treatment,curfew ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை,ஊரடங்கு

மாநிலத்தில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கையில் சென்னை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 2,181 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,256 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,050 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|