Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,762 உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,762 உயர்வு

By: Monisha Mon, 29 June 2020 5:29:15 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,762 உயர்வு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அந்த அளவுக்கு இங்கு நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் நேற்று மாவட்ட நிர்வாகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் குறித்த பட்டியல் வெளியிட்டது. அதில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்ச கட்டமாக 143 பேதிருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,762 உயர்வுருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக கிழக்கு ஆரணியில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டாம்பூண்டியில் 27 பேரும், நாவல்பாக்கத்தில் 27 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டராம்பட்டில் 10 பேரும், புதுப்பாளையம், கலசபாக்கம், பெருங்கட்டூர், மேற்கு ஆரணி பகுதிகளில் தலா 2 பேரும், செங்கத்தில் 3 பேரும், திருவண்ணாமலை நகராட்சியில் 10 பேரும், சேத்துப்பட்டு, ஆக்கூர், பொன்னூர், போளூர் தலா ஒருவரும், தச்சூரில் 7 பேரும், தெள்ளார் பகுதியில் 6 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 143 பேரில் 6 ஆண் குழந்தைகள் 2 பெண் குழந்தைகளும் அடங்கும்.

thiruvannamalai,tamil nadu,coronavirus,influence,kills ,திருவண்ணாமலை,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி

இவர்கள் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டாக்டர்கள் அவர்களை கண்காணித்து வருகின்றனர். இவர்களுடன் தொடர்புடையவர்கள், நெருங்கி பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் 28 பேர் பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் ஆவர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,762 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :