Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,427 ஆக உயர்வு

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,427 ஆக உயர்வு

By: Monisha Thu, 09 July 2020 10:37:16 AM

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,427 ஆக உயர்வு

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2,258 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தோற்று தீவிரம் அடைந்து வருகிறது. மாநிலத்தில் நேற்று புதிதாக 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 72,500 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

coronavirus,influence,death,treatment,health department ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை,சுகாதாரத்துறை

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2,258 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,427 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 818 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தில் வீடு வீடாக சோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Tags :
|