Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரிப்பு; மாவட்ட வாரியாக முழு விபரம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரிப்பு; மாவட்ட வாரியாக முழு விபரம்

By: Monisha Wed, 08 July 2020 09:46:59 AM

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரிப்பு; மாவட்ட வாரியாக முழு விபரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 3 ஆயிரத்து 616 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.

நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 1,636 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona virus,vulnerability,death,treatment,discharge ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை,டிஸ்சார்ஜ்

மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-
அரியலூர் - 475
செங்கல்பட்டு - 6,942
சென்னை - 71,230
கோவை - 839
கடலூர் - 1,342
தர்மபுரி - 124
திண்டுக்கல் - 730
ஈரோடு - 286
கள்ளக்குறிச்சி - 1,274
காஞ்சிபுரம் - 2,836
கன்னியாகுமரி - 757
கரூர் - 174
கிருஷ்ணகிரி - 203
மதுரை - 4,674
நாகை - 314
நாமக்கல் - 118
நீலகிரி - 150
பெரம்பலூர் - 170
புதுக்கோட்டை - 418
ராமநாதபுரம் - 1,479
ராணிப்பேட்டை - 1,312
சேலம் - 1,340
சிவகங்கை - 576
தென்காசி - 530
தஞ்சாவூர் - 533
தேனி - 1,222
திருப்பத்தூர் - 322
திருவள்ளூர் - 5.205
திருவண்ணாமலை - 2,633
திருவாரூர் - 576
தூத்துக்குடி - 1,416
திருநெல்வேலி - 1,295
திருப்பூர் - 237
திருச்சி - 1,059
வேலூர் - 2,097
விழுப்புரம் - 1,233
விருதுநகர் - 1,228

Tags :
|