Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மலை மாவட்டமான நீலகிரியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது!

மலை மாவட்டமான நீலகிரியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது!

By: Monisha Thu, 02 July 2020 2:30:37 PM

மலை மாவட்டமான நீலகிரியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 926 அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 89 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தனியார் ஊசி தொழிற்சாலையில் கொரோனா பாதித்த மக்கள் தொடர்பு அலுவலருடன் 2-ம் நிலை தொடர்பில் இருந்த பெண் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று 17 பேர் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு 107 ஆக உயர்ந்து உள்ளது.

nilgiris,coronavirus,infection,treatment,prevention ,நீலகிரி,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,தடுப்பு நடவடிக்கை

இதில் 39 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 68 பேரில் 44 பேர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையிலும், 24 பேர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறுகிய நாட்களில் மலை மாவட்டமான நீலகிரியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது.

இதனால் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.

Tags :