Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் இறுதிக்குள் 12 லட்சத்தை எட்டும் என கணிப்பு

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் இறுதிக்குள் 12 லட்சத்தை எட்டும் என கணிப்பு

By: Karunakaran Tue, 16 June 2020 2:25:51 PM

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் இறுதிக்குள் 12 லட்சத்தை எட்டும் என கணிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு போராடி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

பாகிஸ்தானில் ஒரே நாளில் 5,248 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 97 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,44,676 ஆகவும், கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,729 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 647 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

pakistan,coronavirus,occupied kashmir,azad umar ,பாகிஸ்தான்,கொரோனா பாதிப்பு ,ஆக்கிரமிப்பு காஷ்மீர்,ஆசாத் உமர்

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் திட்டத்துறை மந்திரி ஆசாத் உமர், கொரோனா பாதிப்பு குறித்து புதிதாக கணிப்பு ஒன்றை கணித்துள்ளார். பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு ஜூலை மாத இறுதிக்குள் 12 லட்சத்தை எட்டக்கூடும் என கணித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், இந்த கணிப்பு உறுதியானது இல்லை. அரசாங்கமும், மக்களும் இதற்கு எதிராக இணைந்து செயல்பட்டால் வைரஸ் பரவுவதை தடுத்து நிறுத்த முடியும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பாகிஸ்தான் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tags :