Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொலிவியா நாட்டு அதிபர் ஜினைன் அனேஸுக்கு கொரோனா பாதிப்பு

பொலிவியா நாட்டு அதிபர் ஜினைன் அனேஸுக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Fri, 10 July 2020 12:34:44 PM

பொலிவியா நாட்டு அதிபர் ஜினைன் அனேஸுக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அதிபர்கள் என கொரோன அனைவரையும் தாக்கி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக அங்கு கடந்த மே மாதம் நடக்க இருந்த அதிபர் தேர்தல், வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, பொலிவியா நாட்டில் மொத்தம் 42,984 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

bolivia,president,jinine anes,corona virus ,பொலிவியா, தலைவர், ஜினின் அனெஸ், கொரோனா வைரஸ்

தற்போது, பொலிவியா நாட்டு அதிபர் ஜினைன் அனேஸ்- க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறித்து அனேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், நலமுடன் இருப்பதாகவும், தனது பணிகளை தனிமைப்படுத்திக் கொண்டபடியே தொடர இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

பொலிவியாவில் சுகாதாரத்துறை மந்திரி உள்பட 7 மந்திரிகள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக பிரேசில் அதிபரும் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :