Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் இருந்து நியூசிலாந்து திரும்பிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இருந்து நியூசிலாந்து திரும்பிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Mon, 22 June 2020 2:36:57 PM

இந்தியாவில் இருந்து நியூசிலாந்து திரும்பிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நியூசிலாந்தில் கடந்த சில வாரங்களுக்கு முன், கொரோனா பரவல் குறைந்து கொரோனா இல்லாத நாடாக மாறியது. ஆனால் தற்போது அங்கு மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. நியூசிலாந்தில் கொரோனாவுக்கு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை நியூசிலாந்தில் ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 482 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

new zealander,india,corona virus,corona testing ,கொரோனா பாதிப்பு,நியூசிலாந்து,இந்தியா,கொரோனா வைரஸ்

இந்நிலையில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து திரும்பிய 2 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 2 வயது குழந்தையும், 59 வயது பெண்ணும் இந்தியாவில் இருந்து நியூசிலாந்து திரும்பிய நிலையில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு கொரோனா பரிசோதனை செய்வதால் நியூசிலாந்தில் நோய் பாதிப்பு குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்திலே உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது அங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா பரவல் தொடங்கிய பிப்ரவரி மாதத்திலே கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால், அங்கு கொரோனா தாக்கம் குறைந்துள்ளது.

Tags :
|