Advertisement

தெலுங்கானாவில் ஒரே நாளில் 253 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Sun, 14 June 2020 11:19:25 PM

தெலுங்கானாவில் ஒரே நாளில் 253 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஒரே நாளில் 253 பேருக்கு பாதிப்பு... தெலுங்கானாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில் அதிகபட்சமாக 253 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 8 பேர் பலியாகினர் என மாநில சுகாதாரதுறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மற்ற சில மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தெலுங்கானாவில் பாதிப்பு பல மாவட்டங்களில் கட்டுக்குள் உள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருக்கும் ஐதராபாத் போன்ற பகுதிகளில் தான் பாதிப்பு அதிகமாக உறுதி செய்யப்படுகிறது.

telangana,healed,kerona,affect,increase ,தெலுங்கானா, குணமடைந்தனர், கெரோனா, பாதிப்பு, அதிகரிப்பு

நோய் பாதிப்புகளை குறைக்க மாநில அரசு சிறப்பான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில், திடீரென நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 253 பேருக்கு நோய் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தின் மொத்த பாதிப்புகள் 4,737 ஆக அதிகரித்தது.

கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் பலியானதுடன் சேர்த்து மொத்தமாக 182 பேர் கொரோனாவால் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. புதிதாக நோய் பாதிக்கப்பட்டவர்களில் 179 பேர் ஐதராபாத் நகர பகுதியையும் (GHMC) 24 பேர் சங்காரெட்டியிலும், 14 பேர் மேட்சலிலும், 11 பேர் ரெங்காரெட்டியிலும், 4 பேர் மஹபூப்நகர், வாரங்கல் கிராம மற்றும் நகர பகுதியிலும், கரீம்நகர், நல்கொண்டா, முலுகு, ராஜன்னா-சிர்சில்லா, மான்சேரியல் தலா 2 பேர்.

சித்திபேட்டை, கம்மம், மெடாக், நிஜாமாபாத், நாகர்-கர்னூல், காமரெட்டி மற்றும் ஜகத்வாலில் தலா ஒருவர் என பாதிக்கப்பட்டனர். மேலும் 74 பேர் குணமடைந்தனர். இதுவரை 2,352 பேர் குணமடைந்தனர். மாநிலத்தில் 2,203 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags :
|
|
|