Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,701 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,701 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Mon, 13 July 2020 12:52:35 PM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,701 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,701 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இதுவரை 8,78,254 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

coronavirus,india,corona prevalence,corona death ,கொரோனா வைரஸ், இந்தியா, கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

கடந்த 24 மணி நேரத்தில் 500 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,174 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5,53,471 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,01,609 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 254427 பேருக்கும், 140325 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags :
|