Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Sat, 20 June 2020 1:02:27 PM

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், கொரோனா பரிசோதனைகள் அதிகரித்துள்ளதாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகியுள்ளது. இந்தியாவிலே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் 3 ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

maharashtra,coronavirus,mumbai,corona death ,கொரோனா பாதிப்பு ,மகாராஷ்டிரா,கொரோனா வைரஸ்,மும்பை

மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 331 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 142 பேர் கொரோனாவுக்கு பலியானதால், அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆயிரத்து 893 ஆக அதிகரித்து உள்ளது. இருப்பினும் அங்கு கொரோனா பாதிப்பில் இருந்து 62 ஆயிரத்து 773 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மஹாராஷ்டிராவில் தற்போது கொரோனா காரணமாக 55 ஆயிரத்து 651 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் நேற்று புதிதாக 1,264 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 64 ஆயிரத்து 139 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மும்பையில் புதிதாக 114 பேர் கொரோனாவுக்கு பலியானதால், மும்பையில் கொரோனா பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 425 ஆக அதிகரித்துள்ளது.

Tags :
|