Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்காளதேசத்தில் ஒரே நாளில் 3,809 பேருக்கு கொரோனா பாதிப்பு

வங்காளதேசத்தில் ஒரே நாளில் 3,809 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Mon, 29 June 2020 10:03:18 AM

வங்காளதேசத்தில் ஒரே நாளில் 3,809 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி, வங்காளதேசத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.30 லட்சத்தை தாண்டியுள்ளது.

bangladesh,coronavirus,corona infection,corona death ,பங்களாதேஷ், கொரோனா வைரஸ், கொரோனா தொற்று, கொரோனா மரணம்

வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 3,809 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,37,787 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பினால் 43 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,738 ஆக உயர்ந்துள்ளது.

வங்காளதேசத்தில் கொரோனாவில் இருந்து 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :