Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 874 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 874 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

By: Karunakaran Sun, 21 June 2020 09:56:27 AM

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 874 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. நாட்டிலேயே கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3 ஆயிரத்து 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3 ஆயிரத்து 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அம்மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து 1,380 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

maharashtra,coronavirus,corona death,mumbai ,மகாராஷ்டிரா,கொரோனா பலி,கொரோனா வைரஸ்,மும்பை

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், கொரோனா பரிசோதனைகள் அதிகரித்துள்ளதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 153 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 160 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா பலி எண்ணிக்கைக்கு 5 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள மும்பை மற்றும் தாராவி போன்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

Tags :