Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலுங்கானாவில் 24 மணிநேரத்தில் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு

தெலுங்கானாவில் 24 மணிநேரத்தில் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Wed, 13 May 2020 11:59:12 PM

தெலுங்கானாவில் 24  மணிநேரத்தில் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு

24 மணிநேரத்தில் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு... தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 51 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து 69.21 சதவீதமாகவும் , தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு 42.12 சதவீதமாகவும் உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

telangana,vulnerability,health care workers,officials,people ,தெலுங்கானா, பாதிப்பு, சுகாதாரப்பணியாளர்கள், அதிகாரிகள், மக்கள்

2 பேர் பலியாகினர். இதனால் மாநிலத்தில் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 1,326 ஆக இருந்தது. இதுவரை 32 பேர் பலியாகினர். நோய் பாதிக்கப்பட்டவர்களில் 37 பேர் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் எனவும் 14 பேர் வெளிமாநில தொழிலாளர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 21 பேர் குணமடைந்தனர்.

குணமடைந்தவர்களின் மீட்பு விகிதம் சராசரியில் 27.40 சதவீதமாக உள்ளது. கொரோனா பாதித்த வெளிமாநில தொழிலாளர்களில் யாதத்ரியில் இருந்து 12 பேர் மற்றும் ஜக்தியலில் இருந்து 2 பேர் என 14 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 25 வெளிமாநில தொழிலாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தெலுங்கானாவில் 472 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

telangana,vulnerability,health care workers,officials,people ,தெலுங்கானா, பாதிப்பு, சுகாதாரப்பணியாளர்கள், அதிகாரிகள், மக்கள்

822 பேர் நோய் குணமடைந்து சென்றனர்.இது தொடர்பாக முதல்வர் சந்திரசேகர ராவ் கூறுகையில், தெலுங்கானாவின் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் புதிய நபர்கள் அல்லது வெளிமாநில தொழிலாளர்கள் வந்தால் உள்ளூர் அதிகாரிகளிடம் மக்கள் தெரிவிக்க வேண்டும். இதற்காக எல்லை மாவட்டங்களில் 87 எல்லை சோதனை சாவடிகளில் 275 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அணிகளில் சுமார் 1,000 சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த 14 நாட்களில், தெலுங்கானா மாநிலத்தின் 26 மாவட்டங்களில் ஒரு கொரோனா வைரஸ் பாதிப்பு கூட பதிவாகவில்லை. இவ்வாறு கூறினார்.

Tags :