Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு; அமைச்சர் தகவல்

தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு; அமைச்சர் தகவல்

By: Nagaraj Mon, 18 May 2020 7:16:18 PM

தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு; அமைச்சர் தகவல்

தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,760- ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,927-லிருந்து 96,169-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,872-லிருந்து 3,029-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 36,824-ஆக உயர்ந்துள்ளது.

corona,minister of examinations,today,tamil nadu,death toll ,கொரோனா, பரிசோதனை, அமைச்சர், இன்று, தமிழகம், பலி எண்ணிக்கை

இந்நிலையில் இன்று தமிழகத்தில் புதிதாக 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,406 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 234 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

corona,minister of examinations,today,tamil nadu,death toll ,கொரோனா, பரிசோதனை, அமைச்சர், இன்று, தமிழகம், பலி எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 81-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 61 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,270 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகரில் மட்டுமே 85,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|