Advertisement

பாகிஸ்தானில் ஒரே நாளில் 5,385 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Thu, 11 June 2020 10:29:43 AM

பாகிஸ்தானில் ஒரே நாளில் 5,385 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.13 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 385 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் ஒரே நாளில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,255 ஆக அதிகரித்துள்ளது.

coronation,pakistan,coronavirus,saudi arabia ,கொரோனா பாதிப்பு,பாகிஸ்தான்,கொரோனா வைரஸ்,சவுதி அரேபியா

மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 36,308 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 1,13,702 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமானோர் பட்டியலில் சவுதி அரேபியாவை பாகிஸ்தான் பின்னுக்கு தள்ளியது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகமானோர் பட்டியலில் பாகிஸ்தான் 15-வது இடத்தில உள்ளது.

Tags :