Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் நேற்று புதிதாக 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கேரளாவில் நேற்று புதிதாக 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

By: Karunakaran Wed, 17 June 2020 10:19:28 AM

கேரளாவில் நேற்று புதிதாக 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டு வருவதால், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், அம்மாநிலத்தில் நேற்று புதிதாக 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.

kerala,coronavirus,health department,corona affect ,கேரளா,கொரோனா பாதிப்பு,சுகாதாரத்துறை,கொரோனா வைரஸ்

கேரளாவில் நேற்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 47 பேர் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் 26 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். மேலும், மீதியுள்ள 5 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,366 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து 1,234 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால் அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags :
|