Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,972 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,972 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Fri, 19 June 2020 5:35:58 PM

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,972 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு 85 லட்சத்து 60 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,972 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதுகுறித்து ரஷ்யாவின் தேசிய கொரோனா தடுப்பு மையம் கூறியதாவது:-

russia,coronavirus,america,vulnerability,death ,ரஷ்யா,கொரோனா வைரஸ்,அமெரிக்கா,பாதிப்பு,பலி

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,972 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 181 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,69,063 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 7,841 ஆகவும் பதிவாகி உள்ளது. மேலும் ரஷ்யாவில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகவே ரஷ்யாவில் 8,000 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ரஷ்யா உள்ளது.

Tags :
|