Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனாவுக்கு 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

By: Monisha Tue, 30 June 2020 10:56:57 AM

சென்னையில் கொரோனாவுக்கு 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 47,749 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 55 ஆயிரத்து 969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 846 பேர் உயிரிழந்துள்ளனர்.

chennai,coronavirus,influence,kills,treatment ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இந்நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|