Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,084 பேருக்கு கொரோனா பாதிப்பு

தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,084 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Tue, 30 June 2020 10:18:27 AM

தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,084 பேருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஒரே நாளில் 2,084 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

coronavirus,india,delhi,corona infection ,கொரோனா வைரஸ், இந்தியா,டெல்லி, கொரோனா தொற்று

தலைநகர் டெல்லியில் தற்போது கொரோனா பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 85,161 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 56 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்லியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2680 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லியில் கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க வங்கி அமைக்கப்படும் என டெல்லி முதல்வர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|