Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்தது

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்தது

By: Karunakaran Fri, 26 June 2020 09:13:34 AM

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 96 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். உலகளவில் இதுவரை 4.87 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தற்போது, தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

coronavirus,telungana,corona infection,health department ,கொரோனா பாதிப்பு,தெலுங்கானா,கொரோனா வைரஸ்,சுகாதாரத்துறை


தெலுங்கானாவில் நேற்று 920 பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தனர். இதனால் தெலுங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 230 ஆக உயர்ந்துள்ளது.

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,688 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

Tags :