Advertisement

கேரளாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

By: Karunakaran Wed, 10 June 2020 09:39:49 AM

கேரளாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் முதன் முதலாக கேரளாவில் தான் பரவியது. அதன்பின் தொடர் சிகிச்சை காரணமாக கொரோனா பாதிப்படைந்தவர்கள் குணமடைந்தனர். மேலும் தீவிர நடவடிக்கை காரணமாக அங்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. தற்போது வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களால் அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 51 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர். மேலும், 27 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். 11 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதிகபட்சமாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களாலே அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

corona,kerala,kerala state health department,overseas people ,கொரோனா,கேரளா,கேரள மாநில சுகாதாரத்துறை,வெளிநாட்டு மக்கள்

இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள மாநிலத்தில் புதிதாக மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 51 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், 27 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,095 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தோரின் எண்ணிக்கை மொத்தம் 848 பேராக உள்ளது.

நாட்டிலே கொரோனாவிலிருந்து முதலில் குணமடைந்தவர் கேரளாவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|