Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Tue, 16 June 2020 09:59:15 AM

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டு வருவதாலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்த கடினமான நிலையிலும், மருத்துவத்துறையினர், காவல் துறையினர், ஊடகத்துறையினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு துறையினர் மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு உதவி செய்பவர்களுக்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.

telangana,coronavirus,rashtriya samiti,volunteers,mla ,தெலுங்கானா,கொரோனா,ராஷ்டிரிய சமிதி,தொண்டர்கள்

நேற்றைய நிலவரப்படி, தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,193 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக அங்கு இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜன்கான் தொகுதி எம்.எல்.ஏ. யாதகிரி ரெட்டி, நிசாமுதின் ரூரல் தொகுதி எம்.எல்.ஏ. பாஜிரெட்டி கோவர்தன், தெலுங்கானா ராஷ்டிய சமிதி கட்சியை சேர்ந்தவரும் நிசாமுதின் அர்பன் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கணேஷ் குப்தா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

Tags :