Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பீகார் முதல்மந்திரி நிதிஷ் குமாருக்கு கொரோனா பரிசோதனை - முடிவு என்ன ?

பீகார் முதல்மந்திரி நிதிஷ் குமாருக்கு கொரோனா பரிசோதனை - முடிவு என்ன ?

By: Karunakaran Sun, 05 July 2020 09:31:17 AM

பீகார் முதல்மந்திரி நிதிஷ் குமாருக்கு கொரோனா பரிசோதனை - முடிவு என்ன ?

பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியாக நிதிஷ் குமார் உள்ளார். இந்நிலையில் அவர் மாநில சட்டமன்ற மேலவை தலைவரான அவடேஷ் நாராயன் சிங் உடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி நடைபெற்றபின், நாராயன் சிங்கிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நாராயன் சிங்கிற்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் மந்திரியான நிதிஷ் குமாருக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.

bihar,corona test,chief minister,nitish kumar ,பீகார், கொரோனா சோதனை, முதல்வர், நிதீஷ் குமார்

இந்நிலையில் முதல் மந்திரி நிதிஷ் குமார் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதனால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா என பலரும் அதிர்ச்சியில் எதிர்பார்த்திருந்தனர். தற்போது அவரது கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகின.

கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பரவவில்லை என முடிவு வெளியாகியது, சற்று ஆறுதலடைய வைத்துள்ளது. இருப்பினும், தன்னுடனும், சட்டமன்ற மேலவை தலைவருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்த அதிகாரிகள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.

Tags :
|