Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் ஒரே நாளில் 61 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் 61 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

By: Nagaraj Fri, 10 July 2020 10:34:52 AM

அமெரிக்காவில் ஒரே நாளில் 61 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸால் அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 61 ஆயிரத்தை தாண்டியது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.23 கோடியைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.56 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து 2ஆவது 61 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

corona,60 thousand,usa,victims,casualties ,கொரோனா, 60 ஆயிரம், அமெரிக்கா, பாதிப்பு, பலியானோர்

நேற்று 61,300-க்கும் அதிகமானோர் பாதிப்புஅடைந்தனர். இன்றும் 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 32 லட்சத்தைத் தாண்டியது.

கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.35 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 14.25 லட்சத்தைக் கடந்துள்ளது.

Tags :
|
|