Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Thu, 25 June 2020 3:42:30 PM

அமெரிக்காவில் ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாது உலக நாடுகளின் பொருளாதாரமும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 95 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 95 லட்சத்து 43 ஆயிரத்து 028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4.83 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 51 லட்சத்து 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

america,coronavirus,vulnerability,death toll ,அமெரிக்கா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி எண்ணிக்கை

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

மேலும், கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்தைத் தாண்டியது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து 10 லட்சத்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

Tags :