Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த கஷாயம் குடித்தாலே கொரோனா பாதிப்பு சரியாகிவிடுமா ? - உண்மை பின்னணி என்ன ?

இந்த கஷாயம் குடித்தாலே கொரோனா பாதிப்பு சரியாகிவிடுமா ? - உண்மை பின்னணி என்ன ?

By: Karunakaran Tue, 30 June 2020 1:59:57 PM

இந்த கஷாயம் குடித்தாலே கொரோனா பாதிப்பு சரியாகிவிடுமா ? - உண்மை பின்னணி என்ன ?

தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் கொரோனா மருந்து குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் கொரோனா குறித்து வதந்திகளும் பரவி வருகின்றன. இந்நிலையில் எலுமிச்சை சாறு, கிராம்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் குடித்தால் கொரோனா வைரஸ் தொற்று சரியாகிடும் என புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில், இது கஷாயம் அல்லது கதா என அழைக்கப்படும் ஆயுர்வேத நீர் மருத்துவ தேநீர் என்று அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கஷாயம் செய்து குடிக்க தேவையானவை அதன் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அலோபதி மருத்துவர் பரிந்துரைத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

coronavirus,corona prevalence,brew,corona drinking ,கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கஷாயம், கொரோனா பானம்

இந்த கஷாயத்தை குடித்த நபருக்கு கொரோனா தொற்று 24 மணி நேரத்தில் சரியாகிவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது, இந்த கஷாயம் கொரோனா வைரஸ் தொற்றை சரி செய்துவிடும் என எந்த மருத்துவரும் பரிந்துரைக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த கஷாயம் கொரோனா வைரஸ் தொற்றை சரி செய்யும் என இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

அதன்படி, சமூக வலைத்தளத்தில் வைரலாகும் இந்த செய்து உண்மை இல்லை, போலி செய்தி என தெரிய வந்துள்ளது. கஷாயம் குடித்தால் கொரோனா நோய் தொற்று சரியாகி விடும் என்பது போலி செய்தி என்பது நிரூபணமாகிவிட்டது.

Tags :
|