Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் மனிதர்களின் மன நலம் மோசமான நிலைக்கு செல்லலாம் - மன நல நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனாவால் மனிதர்களின் மன நலம் மோசமான நிலைக்கு செல்லலாம் - மன நல நிபுணர்கள் எச்சரிக்கை

By: Karunakaran Sun, 28 June 2020 2:04:06 PM

கொரோனாவால் மனிதர்களின் மன நலம் மோசமான நிலைக்கு செல்லலாம் - மன நல நிபுணர்கள் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஒரு புறம் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் தொழில் நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும், பொழுதுபோக்கு பூங்காக்களும், திரையரங்குகளும், வணிக வளாகங்களும், விடுதிகளும், உணவகங்களும் மூடப்பட்டுள்ளதால் பலர் வேலையின்றி தவித்து வருகின்றனர். ஒட்டுமொத்த தொழிலாளர் துறையும் கொரோனா வைரஸ் காரணமாக முடங்கியுள்ளது.

coronavirus,human health,mental health,warning ,கொரோனா வைரஸ், மனித ஆரோக்கியம், மன ஆரோக்கியம், எச்சரிக்கை

சேர்த்து வைத்திருந்த பணம் எல்லாம் செலவாகிப்போக, மிச்சமிருந்த நம்பிக்கையும் பறிபோக மனதளவில் மிகுந்த பாதிப்பில் தள்ளி விட்ட மக்கள் தற்கொலை போன்ற விபரீத எண்ணங்களுக்கு ஆளாவதாக மனநல மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை மாஸ்டர்மைண்ட் பவுண்டேசன் அமைப்பு கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கிய காலம்தொட்டு, நாடு முழுவதும் இலவச கவுன்சிலிங் சேவையை தன்னலமற்று வழங்கிக்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று பெருகி வருகிற இந்நாளில் மாநகராட்சி நிர்வாகம், கொரோனாவுக்கு எதிரான போரை நடத்தி வருகிற சூழலில், மக்களின் மனநலம் காக்கவும் வகை செய்துள்ளது. ஒரு மன நல மருத்துவ நிபுணர், ஒரு ஆலோசகர், ஒரு சமூக சேவகர் என அடங்கிய குழுை-வை மண்டலம் தோறும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன நல ஆலோசனை வழங்க களம் இறக்கியுள்ளது.

Tags :