Advertisement

சீனாவில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Karunakaran Sat, 13 June 2020 10:13:22 AM

சீனாவில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 215க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகின் மற்ற நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியபோது சீனாவில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் 2 பேர் உள்பட புதிதாக 10 பேருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது என்ற நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 56 நாட்களுக்கு பிறகு, தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

china,coronavirus,coronation,human disaster ,சீனா,பீஜிங்,கொரோனா பாதிப்பு, மனித பேரழிவு

பீஜிங்கில் புதிதாக நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள சீன இறைச்சி உணவு ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள் ஆவார்கள். இது ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. பீஜிங் நகரம் கொரோனா பரவுவதை தடுக்க தனிமையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா மீண்டும் பரவ தொடங்கியிருப்பதால் 1-வது கிரேடு முதல் 3-வது கிரேடு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதை நகர நிர்வாகம் நிறுத்தி உள்ளது.

பீஜிங்கில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர், பீஜிங்கிற்கு வெளியே சென்று வந்தது தெரிய வந்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் பீஜிங்கில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 2 பேருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags :
|