Advertisement

அமெரிக்காவில் 20,00,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Thu, 11 June 2020 5:53:13 PM

அமெரிக்காவில் 20,00,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உலக அளவில் கொரோனா வைரசால் 74 லட்சத்து 58 ஆயிரத்து 921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4 லட்சத்து 19 ஆயிரத்து 020 பேர் பலியாகி உள்ளனர். 37 லட்சத்து 78 ஆயிரத்து 218 பேர் குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவப் பல்கலைக்கழகம் ஜான் ஹாப்கின்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- அமெரிக்காவில் 20,00,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 1,12,924 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

corona virus,usa,new york,new jersey,california,texas ,கொரோனா வைரஸ்,அமெரிக்கா,நியூயார்க்,நியூ ஜெர்சி,கலிபோர்னியா,டெக்சாஸ்

நியூயார்க் தொடர்ந்து கொரோனாவின் மையமாக இருந்து வருகிறது. நியூயார்க்கில் இதுவரை 3,80,156 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,542 பேர் பலியாகி உள்ளனர்

இந்த நிலையில் நியூ ஜெர்சி, கலிபோர்னியா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களிலும் கொரோனா தொற்று ஜூன் மாதத்திலிருந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags :
|