Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Mon, 01 June 2020 09:44:08 AM

தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருவதையடுத்து 5-ம் கட்ட ஊரடங்கை ஜூன் 30 வரை நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.

தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அங்கு ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,286 ஆக அதிகரித்துள்ளது.

india,coronavirus,maharashtra,dharavi cottage area,increase in infection ,இந்தியா,கொரோனா வைரஸ்,மகாராஷ்டிரா,தாராவி குடிசைப்பகுதி,தொற்று அதிகரிப்பு

உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,771 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 71 ஆக உள்ளது.

Tags :
|