Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 539 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி

பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 539 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி

By: Monisha Tue, 16 June 2020 09:19:54 AM

பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 539 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி

சீனாவின் உகான் நகரிலிருந்து கடந்த ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 78,93,700 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,32,922 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளது.

பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 25,930 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியதாவது:-

china,corona virus,philippines,schools ,சீனா,கொரோனா வைரஸ்,பிலிப்பைன்ஸ்,பள்ளிகள்

பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 539 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,930 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, நடைமுறைக்கு வரும் வரையில் பிலிப்பைன்ஸில் பள்ளிகள் திறக்கப்படாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Tags :
|