Advertisement

இந்தியாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 4021 ஆக உயர்வு

By: Monisha Mon, 25 May 2020 09:52:46 AM

இந்தியாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 4021 ஆக உயர்வு

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகநாடுகள் அனைத்திலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

india,coronavirus,death toll,curfew,maharashtra ,இந்தியா,கொரோனா வைரஸ்,பலி எண்ணிக்கை,ஊரடங்கு,மஹாராஷ்டிரா

இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1,38,845 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 154 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4021 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 57,721 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

அதிக பாதிப்பு எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலில் இடத்தில் உள்ளது. அடுத்ததாக 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது.

Tags :
|
|