Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7.43 லட்சமாக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7.43 லட்சமாக அதிகரிப்பு

By: Nagaraj Wed, 08 July 2020 08:56:29 AM

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7.43 லட்சமாக அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு 7.43 லட்சமாக உயர்வு... இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,43,481 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 20,653 பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 23,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 7,43,481 ஆக உள்ளது. நேற்று 479 பேர் உயிர் இழந்துள்ளனர். இதையடுத்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 20,653 ஆக உள்ளது. நேற்று 16,849 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,57,058 ஆக உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,65,670 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 5,134 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,17,121 ஆக உள்ளது. நேற்று 224 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 3,296 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 3,616 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று 54 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 4,545 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

india,corona,vulnerability,overcoming,healing ,இந்தியா, கொரோனா, பாதிப்பு, தாண்டியது, குணமடைந்து

டில்லியில் நேற்று 2,008 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,02,831 ஆக உள்ளது. இதில் நேற்று 50 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 2129 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 74,217 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 778 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 37,636 ஆக உள்ளது இதில் நேற்று 17 பேர் பலியாகி உள்ளனர். நேற்று வரை மொத்தம் 26,744 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 1332 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,968 ஆக உள்ளது இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 827 பேர் மரணம் அடைந்துள்ளனர். மொத்தம் 19,627 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Tags :
|
|