Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குமரி மாவட்டத்தில் தினம் தினம் அதிகரிக்கும் கொரோனா தொற்று...கண்காணிப்பு பணிகள் தீவிரம்

குமரி மாவட்டத்தில் தினம் தினம் அதிகரிக்கும் கொரோனா தொற்று...கண்காணிப்பு பணிகள் தீவிரம்

By: Monisha Mon, 29 June 2020 6:15:18 PM

குமரி மாவட்டத்தில் தினம் தினம் அதிகரிக்கும் கொரோனா தொற்று...கண்காணிப்பு பணிகள் தீவிரம்

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் மட்டுமே முதலில் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலும் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தூத்தூர், சின்னத்துறை, சின்னமுட்டம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதே போல அருமநல்லூர், சீதப்பால், தேவிக்கோடு, வள்ளவிளை, குலசேகரம், சுசீந்திரம் ஆஸ்ராமம், பாகோடு என மாவட்டம் முழுவதும் பரவல் அதிகரித்து உள்ளது.

urban,rural,kanyakumari,coronavirus,vulnerability ,நகர்ப்புறங்கள்,கிராமப்புறங்கள்,கன்னியாகுமாரி,கொரோனா வைரஸ்,பாதிப்பு

நாகர்கோவிலில் மறவன்குடியிருப்பு, ஆயுதப்படை சாலை, வல்லன்குமாரன்விளை, வடசேரி ஒழுகினசேரி, மரச்சீனிவிளை, பறக்கை கண்ணன்குளம் ஆகிய இடங்களில் கொரோனா தொற்று காணப்படுகிறது. அந்த வகையில் மொத்தம் 24 பகுதிகளில் கொரோனா தொற்று அதிகம் உள்ளது. அவ்வாறு நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன.

மேலும் அவை சிவப்பு மண்டல பகுதியாக மாற்றப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடக்கிறது. அதோடு தினம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் தினம், தினம் தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

Tags :
|
|