Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் பாதிப்பு உலக அளவில் 68.44 லட்சம் ஆக அதிகரிப்பு

கொரோனாவால் பாதிப்பு உலக அளவில் 68.44 லட்சம் ஆக அதிகரிப்பு

By: Nagaraj Sat, 06 June 2020 2:02:38 PM

கொரோனாவால் பாதிப்பு உலக அளவில் 68.44 லட்சம் ஆக அதிகரிப்பு

உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,351 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 68,44,838-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனாவால் 701 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து நோய் பாதிப்பால் பலியானவா்களின் எண்ணிக்கை 3,98,147-ஆக உயா்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,48,998 லட்சத்தை கடந்துள்ளது.

worldwide,corona,impact,us,russia,casualties ,உலக அளவு, கொரோனா, பாதிப்பு, அமெரிக்கா, ரஷியா, பலி எண்ணிக்கை

தொற்று பாதித்தோர் 30,44,076 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 53,617 -க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பாதிப்பு எண்ணிக்கையைப் பொறுத்தவரை சா்வதேச அளவில் அமெரிக்காவில் 19,65,708 பேரும், பிரேசில் 6,46,006 பேரும் ரஷியாவில் 4,49,834 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று பாதிப்பில் ரஷியா 3-ஆவது இடத்தில் இருந்தாலும், அங்கு கொரோனா பலி விவரம் முழுமையாக வெளியிடப்படுவதில்லை என்று சந்தேகிக்கப்படுகிறது.

Tags :
|
|
|
|