Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Fri, 29 May 2020 10:40:09 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் தீவிரம் அடைந்து வருகிறது. நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகரிப்பதால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1லட்சத்து 65ஆயிரத்து 799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7ஆயிரத்து 466 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 175 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆயிரத்து 706 ஆக உயர்ந்துள்ளது.

india,coronavirus,central health department,maharashtra,tamil nadu,gujarat ,இந்தியா,கொரோனா வைரஸ்,மத்திய சுகாதாரத்துறை,மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத்

இதுவரை 71ஆயிரத்து 106 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 3ஆயிரத்து 414 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.

நாடு முழுவதும் பரவலாக கொரோனா தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.

india,coronavirus,central health department,maharashtra,tamil nadu,gujarat ,இந்தியா,கொரோனா வைரஸ்,மத்திய சுகாதாரத்துறை,மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத்

அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பாதிப்பு எண்ணிக்கை விபரம்:-
மகாராஷ்டிரா - 59,546
தமிழ்நாடு - 19372
டெல்லி - 16281
குஜராத் - 15562

Tags :
|