Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 46,504 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 46,504 ஆக அதிகரிப்பு

By: Monisha Tue, 16 June 2020 11:07:54 AM

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 46,504 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மொத்தம் 3 லட்சத்து 43 ஆயிரத்து 091 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 667 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 380 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9900 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 16 நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 1843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 797 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 25,344 பேர் குணமடைந்துள்ளனர்.

india,coronavirus,tamil nadu,chennai,chengalpattu ,இந்தியா,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,சென்னை,செங்கல்பட்டு

மேலும், சர்வதேச விமானத்தில் பயணம் செய்த 213 பேர் விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்த 90 பேர் விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ரயிலில் பயணம் செய்த 317 பேர் ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்ட அளவில் அதிகம் பாதிப்புள்ள 10 மாவட்டங்களின் விவரம்:
சென்னை - 33,244
செங்கல்பட்டு - 3,005
திருவள்ளூர் - 1,922
காஞ்சிபுரம் - 751
திருவண்ணாமலை - 701
கடலூர் - 560
திருநெல்வேலி - 489
மதுரை - 442
விழுப்புரம் - 440
தூத்துக்குடி - 436

Tags :
|