Advertisement

சிங்கப்பூரில் தினமும் உயரும் கொரோனா வைரஸ் பாதிப்பு

By: Nagaraj Sat, 23 May 2020 6:41:51 PM

சிங்கப்பூரில் தினமும் உயரும் கொரோனா வைரஸ் பாதிப்பு

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரையும் விட்டு வைக்கவில்லை. அங்கு மேலும் 614 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூரிலும் நோய் தொற்று நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், சிங்கப்பூரில் மேலும் 614 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,426 ஆக அதிகரித்துள்ளது.

corona,examination,workers,abroad,healed ,கொரோனா, பரிசோதனை, தொழிலாளர்கள், வெளிநாடு, குணமடைந்தனர்

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வெளி நாடுகளில் இருந்து வந்து தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் கட்டுமான மற்றும் உணவு விடுதி போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்பவர்கள்.

தொடர்ந்து, நாட்டில் உள்ள ஆரஞ்சு பள்ளத்தாக்கு நர்சிங் ஹோம் பகுதி புதிய கிளஸ்டராக அறிவிக்கப்பட்டுள்ளது. டது. அதன் குடியிருப்பாளர்களில் 4 பேர் நோய் தொற்றுக்கு பரிசோதிக்கப் பட்டனர். ஒரே நாளில் 10,200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நோய் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆக உள்ளது. இதுவரை 12,108 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|