Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் ஜூன் மாத இறுதியில் கொரோனா தொற்று இரு மடங்காகும்

பாகிஸ்தானில் ஜூன் மாத இறுதியில் கொரோனா தொற்று இரு மடங்காகும்

By: Monisha Tue, 16 June 2020 10:18:27 AM

பாகிஸ்தானில் ஜூன் மாத இறுதியில் கொரோனா தொற்று இரு மடங்காகும்

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு ஜூன் மாத இறுதியில் இரு மடங்காக அதிகரிக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் திட்டக் குழு அமைச்சர் அசாத் உமர் கூறியதாவது:- ஜூன் மாத இறுதியில் பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்று தற்போதுள்ள எண்ணிக்கையை விட இரு மடங்காக அதிகரிக்கும். சுமார் 3 லட்சம் மக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகலாம் என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

pakistan,coronavirus,medical professionals,assad umar ,பாகிஸ்தான்,கொரோனா வைரஸ்,மருத்துவ நிபுணர்கள்,அசாத் உமர்

பாகிஸ்தானில் இதுவரை 1 லட்சத்து 44 ஆயிரத்து 472 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 2,729 பேர் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தானில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் உச்ச நிலையை அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தான் அரசு தன்னார்வலர்கள் குழுவை ஏற்படுத்தி, கொரோனா வைரஸின் தீவிரம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

Tags :