Advertisement

சென்னையில் ஒரே நாளில் 1,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Sat, 13 June 2020 1:17:43 PM

சென்னையில் ஒரே நாளில் 1,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மொத்தம் 3 லட்சத்து 08 ஆயிரத்து 993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8884 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1 லட்சத்து 54 ஆயிரத்து 330 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 779 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாட்டில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 22 ஆயிரத்து 047 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 367-ஆக அதிகரித்துள்ளது.

india,coronavirus,tamil nadu,chennai,coronavirus confirmed ,இந்தியா,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,சென்னை,கொரோனா தொற்று உறுதி

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது. 14,723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக உள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 4,821 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 3,108 பேருக்கும், திரு.வி.க.நகரில் 2,660 பேருக்கும், அண்ணாநகரில் 2,781 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 3,781 பேரும், தேனாம்பேட்டையில் 3,464 பேரும், திருவொற்றியூரில் 1,072 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 1,268 பேருக்கும், பெருங்குடியில் 536 பேருக்கும், அடையாறில் 1,607 பேருக்கும், அம்பத்தூரில் 987 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 587 பேருக்கும், மாதவரத்தில் 780 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 527 பேருக்கும், மணலியில் 418 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Tags :
|