Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் - அதிபர் டிரம்ப்

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் - அதிபர் டிரம்ப்

By: Karunakaran Fri, 03 July 2020 10:03:48 AM

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் - அதிபர் டிரம்ப்

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா காரணமாக, இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். தற்போது, சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் தான் கொரோனா வைரஸ் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

coronavirus,plague,china,trump ,கொரோனா வைரஸ், பிளேக், சீனா, டிரம்ப்

இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளைமாளிகையில் டிரம்ப் பேட்டி அளித்தபோது, கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய், அது தான் இது. இது நடைபெறாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் இது நடைபெற அனுமதித்துள்ளனர் என்று கூறினார்.

மேலும் அவர், நாங்கள் அப்போது தான் புதிதாக வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தோம். கையெழுத்தான மையின் ஈரம் காய்வதற்கு முன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். 14 ஆம் நூற்றாண்டில் பிளேக் நோய் காரணமாக 25 மில்லியனுக்க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|