Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்ட்ரா, டெல்லி உட்பட 8 மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்

மகாராஷ்ட்ரா, டெல்லி உட்பட 8 மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்

By: Nagaraj Sun, 28 June 2020 1:07:56 PM

மகாராஷ்ட்ரா, டெல்லி உட்பட 8 மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்

இந்தியாவில் மகாராஷ்ட்ரா, டெல்லி உட்பட 8 மாநிலங்களில்தான் கொரோனாவால் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்த மாநிலங்களில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொட்டுக் கொண்டுள்ளது.

மகாராஷ்ட்ரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில்தான் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா நோயாளிகளில் 85 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

8 states,increase,patients,corona,health department ,8 மாநிலங்கள், அதிகரிப்பு, நோயாளிகள், கொரோனா, சுகாதாரத்துறை

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத: மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் பெருமளவிலான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 லட்சத்தை எட்டியுள்ளது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். 87 சதவீத இறப்புகளும் இந்த எட்டு மாநிலங்களில் தான் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் நோய் இரட்டிப்பு ஆவது 19 நாட்களாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|