Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவின் தென் மற்றும் மத்தியப் பகுதிகளில் கொரோனா கடுமையாகப் பரவி வருகிறது - உலக சுகாதார அமைப்பு

அமெரிக்காவின் தென் மற்றும் மத்தியப் பகுதிகளில் கொரோனா கடுமையாகப் பரவி வருகிறது - உலக சுகாதார அமைப்பு

By: Monisha Sat, 13 June 2020 5:14:27 PM

அமெரிக்காவின் தென் மற்றும் மத்தியப் பகுதிகளில் கொரோனா கடுமையாகப் பரவி வருகிறது - உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 77.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 39.19 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து உலக சுகாதார அமைப்பின் சிறப்பு நிபுணரான மைக் ரியான் கூறியதாவது:-

united states,coronavirus,world health organization,brazil,public health ,அமெரிக்கா,கொரோனா வைரஸ்,உலக சுகாதார அமைப்பு,பிரேசில்,பொது சுகாதாரம்

கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவின் தென் மற்றும் மத்தியப் பகுதிகளில் கடுமையாகப் பரவி வருகிறது. தற்போதைய தகவலின்படி பிரேசில் கொரோனா பரவலின் மையமாக தற்போது உருவாகியுள்ளது. குறிப்பாக அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதி தீவிரமாகப் பரவி வருகிறது.

அமெரிக்காவில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். பிரேசிலில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளி மற்றும் பொது சுகாதாரத்தைப் பின்பற்றாமல் இருந்தால் தொற்று மீண்டும் பரவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
|