Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

By: Nagaraj Fri, 12 June 2020 11:06:45 AM

இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

இந்தியாவில் ஒரே நாளில் 10, 956 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பெரும் அதிர்வலைகள் எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. மேலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. எனினும், இந்தியாவில் மும்பை, சென்னை, தில்லி ஆகிய நகரங்களில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

corona,india,impact,usa,brazil ,கொரோனா, இந்தியா, பாதிப்பு, அமெரிக்கா, பிரேசில்

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், நாட்டில் 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,86,579-லிருந்து 2,97,535-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 396 பேர் பலியானதையடுத்து ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 8,102-லிருந்து 8,498-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,41,029-லிருந்து 1,47,195-ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|
|