Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,32, 913 ஆக அதிகரிப்பு

பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,32, 913 ஆக அதிகரிப்பு

By: Monisha Sat, 20 June 2020 5:19:14 PM

பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,32, 913 ஆக அதிகரிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 87 லட்சத்தை கடந்தது. இன்னும் 12 லட்சம் வந்துவிட்டால் ஒரு கோடி வந்துவிடும் என்றும் இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு கோடியை நெருங்கிவிடும் என்றும் வல்லுனர்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும் பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் பிரேசிலில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

brazil,coronavirus,casualty figures,healthcare sector,death ,பிரேசில்,கொரோனா வைரஸ்,பாதிப்பு எண்ணிக்கை,சுகாதாரத் துறை,பலி எண்ணிக்கை

இது குறித்து பிரேசில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:- "பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,32, 913 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை 49,090 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை 5,07,000 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த வெளியிட்ட அறிவிப்புகளை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா சரியாக கையாளவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|